Thursday, 26 July 2012
Wednesday, 2 May 2012
மழை!.....
நீ அதிகம் வந்தால்..
ஐயோ!! இப்படி பெய்கிறதே ......
என்கிறார்கள்........
நீ வரவில்லை என்றால்
பாலாப்போன மழை என்று
புலம்புகிறார்கள் .......
அது ஏனோ
எனக்கு மட்டும் உன்மேல்
அப்படி ஒரு நெருக்கம்....
பள்ளிப்பருவத்தில்
வீடு திரும்புகையில்
எத்தனையோ நாட்கள்
என்னை, உன்னில் தொலைத்து
புத்தகபைக்கு சட்டையை
குடையாக்கி வீடுசேர்ந்திருக்கிறேன்.......
சாலை குழிகளில்
தேங்கிய உன்னில்
என்னை துலைத்திருகிறேன்....
பெருக்கெடுத்து ஓடிய
ஆற்று வெள்ளத்தில்
கயிறு கட்டி உன்னில் இறங்கி
உன் பலத்தை சோதித்திருக்கிறேன்.......
பகலில் உன் நிறத்தை
அறிந்த நான்
இரவில் உன் நிரமரிய
பல நாள் தவம் இருந்திருக்கிறேன் .........
பேருந்து பயணத்தில்
ஜன்னல் வழியே உன்னில் நுழைய
விரும்பியபோதெல்லாம்
பக்கத்தில் இருப்பவரிடம்
செல்ல திட்டு வாங்கிருக்கிறேன் .......
ஜலத்தில் தான் பிறக்கிறோம்
ஆனாலும்........
உன்னைத் தொட்டால் ஜுரம் வருமாம்
நீ வரும்போதெல்லாம்
இந்த பூமியை குளிரூட்டித்தான்
செல்கிறாய்..
அது எப்படி இந்த மனிதர்களுக்கு
மட்டும் உன்னால் வெப்பம் வருகிறது?
அது என்னவோ நேற்று மாலை கூட
உன்னில் தான் திழைத்திருந்தேன்.........
குளிர்ச்சியைத் தவிர
குளிர்ச்சியைத் தவிர
வேறு உணர்ந்ததில்லை உன்னில்.........
Thursday, 26 April 2012
Monday, 23 April 2012
Sunday, 22 April 2012
Tuesday, 17 April 2012
விருட்சம் என்று விட்டுவிட்டாய் !
உன்னைப் பெற்றெடுத்து
என் வலப்பக்கம் நீ கிடக்கையில்
நான் நினைத்ததில்லை .........
மார்விலக்கி முலைப்பிடித்து
பால் புகட்டும்போது
நான் நினைத்ததில்லை .........
நீ தவழும்போது
என் உயிர் வைத்து
உன்னைப் பாதுகாக்கையில்
நான் நினைத்ததில்லை .......
என் பாதத்தின் மேல்
உன் பூப் பாதம் வைத்து
நீ நடைப்பழகுகையில்
நான் நினைத்ததில்லை ....
உன் தலைப் பிடித்து
வகிடெடுத்து சிகைவாரிவிடுகையில்
நான் நினைத்ததில்லை ......
நீ முழுகால் சட்டைப் போட்டு
என் முந்தானைப் பிடித்து
வருகையில் கூட
நான் நினைத்ததில்லை........
காதலி என்ற காரிகையை
கண்டவுடன் .......
என்னை விருட்சம் என்று
விட்டுப்போவாய் என
ஒரு நாளும் நினைத்ததில்லைஅடா ......
Saturday, 14 April 2012
Monday, 9 April 2012
Saturday, 7 April 2012
Subscribe to:
Posts (Atom)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)

.jpg)
